“காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது”.. ஆடல், பாடல், குத்தாட்டத்துடன் 16 லட்சம் பணப்பெட்டியை (16L cash box) எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பூர்ணிமா ரவி.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசனில் ரூ.16 லட்சம் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே சென்ற பூர்ணிமா ரவிவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா..
இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது 95 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று விஷ்ணு நேரடியாக பைனலுக்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில், விஷ்ணுவைத் தவிர விசித்ரா, தினேஷ், மாயா, பூர்ணிமா, மணி, விஜய் வர்மா, அர்ச்சனா ஆகிய 7 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இவர்கள் 7 பேருமே இந்த வார நாமினேஷனில் இருந்தனர்.
இதனிடையே, இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி கொண்டு வரப்பட்டது. பணத்தின் மதிப்பு ஏற ஏற இதை யார் எடுக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
தற்போது பணப்பெட்டியில் மதிப்பு 16 லட்சமாக உயர்ந்த நிலையில், பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஆட்டம், பாட்டம், குத்தாட்டத்துடன் வெளியேறி இருக்கிறார்.
பூர்ணிமா ரவி ஸ்மார்ட் மூவாக ரூ.16 லட்சம் தொகையுடன் (16L cash box) கூடிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய பூர்ணிமாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வழங்கியுள்ள சம்பளம் குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த தகவலின் படி, பிக் பாஸ் வீட்டில் இருக்க பூர்ணிமாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.16 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம்.
இதையும் படிங்க : https://itamiltv.com/check-today-january-5th-gold-and-silver-price-in-chennai-business-gold-decline-trending-viral-news-tamil-nadu/
அப்படி பார்த்தால் அவர் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த 96 நாட்களுக்கு அவருக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக மொத்தம் கூட்டி கழித்து பார்த்தல் பிக்பாஸில் இருந்து பணபெட்டியுடன் வெளியேறியுள்ள பூர்ணிமாவுக்கு சுமார் 31 லட்சம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களிலேயே அதிகபட்ச தொகையுடன் கூடிய பணப்பெட்டியோடு வெளியேறிய போட்டியாளர் என்கிற பெருமையையும் பூர்ணிமா பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் நடிகர் சிபி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் ரூ.13 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறியது தான் அதிகபட்ச தொகையாக இருந்தது. தற்போது பூர்ணிமா அதை முறியடித்து உள்ளார்.
ரூ.16 லட்சம் பணப்பெட்டியை எடுத்த உடன் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ள பூர்ணிமா,
போட்டியாளர்ள் அனைவரிடமும் தப்ப ஏதாவது பன்னிருந்தா மன்னிச்சிருங்கப்பா என நெடுஞ்சாண்கடையாக விழுந்து மன்னிப்பும் கேட்டுள்ளார்.