Site icon ITamilTv

BB 7 : நிக்சனை வெளியேற்ற மாயா செய்த செயல்.. பிக் பாஸ் வைத்த செக்!!

Spread the love

நிக்சனை தலைவர் பதவியை காலி பண்ணி நேரடியாக அடுத்த வாரத்துக்கு நாமினேஷன் செய்வதற்காக புது யுக்தியை கையாளும் மாயா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 30ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ள நிலையில், அதில் இந்த வார தலைவராக இருக்கும் நிக்சன் தலைவர் பதவியை காலி பண்ணி அவரை நேரடியாக அடுத்த வாரத்துக்கு நாமினேஷன் செய்வதற்காக மாயா புது யுக்தியை கையாண்டு இருக்கிறார்.

அதாவது, ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் யாரும் வரக்கூடாது என்ற விதி இருக்கும் நிலையில், அதை கூல் சுரேஷ் மீறி இருக்கிறார். அதை வைத்து மாயா இந்த வாரம் தலைவராக இருக்கும் நிக்சனிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கடந்த வாரத்தில் டாஸ்க்குகள் சுவாரஸ்யமாக இல்லை என்று நிக்சன் கூறி இருந்த நிலையில், அதனால் பிக் பாஸ் அவரிடம் நீங்களே சுவாரசியமான டாஸ்க்களை சொல்லுங்கள் என்று சொல்ல, அதனால் ஒரு சில டாக்குகளை சொல்லி நிக்சன் தனக்குத்தானே ஆப்பு வைத்து கொண்டார். பாவம் அடுத்த வாரமே இப்படி தலைவராகுவார் என்று நிக்சனே எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

தலைவர் ஆனதும் இதை சரியாக பயன்படுத்தி நிக்சனை பழி வாங்குவதற்காக, பிக் பாஸ் புது யுக்தியை கையாண்டு இருக்கிறார். அதாவது நிக்சன் இந்த வாரம் முழுக்க தலைவராக இருக்கும் போது அவருடைய தலைமையில் யாருக்கேனும் அநீதி நடக்கிறது என்று தோன்றினால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு மணியை அடித்து தங்களுடைய கம்ப்ளைன்ட் ரெஜிஸ்டர் பண்ணலாம்.

அது ஏற்கப்பட்டால் தலைவர் பதவியில் இருந்து நிக்சன் இறக்கப்பட்டு நேரடியாக அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில், மாயா நிக்சனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அதற்கு காரணம் காலை நேரத்தில் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அனனியாவுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி உன் கண்ணு முன்னாடியே ரூல் பிரேக் நடக்கிறது நிக்சன். அதை நீ கேட்கவில்லை. ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து உடற்பயிற்சி செய்யலாம் என்று ஏதேனும் விதி இருக்கிறதா? அதை என்னிடம் காட்டு என்று கேள்வி கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் நிக்சன் திணறுகிறார்.

அதோடு இங்கே மழை பெய்கிறது நான் உள்ளே வருவேன் என்று மாயா சொல்ல அது முடியாது என்று நிக்சன் தடுத்ததால் வீட்டிற்குள் சென்ற மாயா அங்கு வைக்கப்பட்டிருக்கும் மணியை அடித்து இங்கு எல்லோர் முன்பும் எனக்கு பெரிய அநீதி நடந்திருக்கிறது என்று கூறுகிறார்.

இதனால், ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இது நிக்சனை தூக்குவதற்காக பிக் பாஸ் வைத்த செக் என்பதை காண கச்சிதமாக புரிந்து கொண்ட மாயா இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன் கூட்டத்தில் இருக்கும் நிக்சனுக்கு ஆப்பு வைத்திருக்கிறார்.


Spread the love
Exit mobile version