பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள சின்னத்திரை நடிகை – யார் இந்த வினுஷா தேவி?

கோலாகலமாக தொடங்கியுள்ள பிக் பாஸ் ஏழாவது சீசன் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார் சீரியல் நடிகை வினுஷா தேவி.

மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் அவருக்கு முன்னதாக பிரபல நடிகர் கூல் சுரேஷ், நடிகை பூர்ணிமா ரவி, ரவீனா, நடிகர் பிரதீப் ஆண்டனி ஆகியோர் சென்ற நிலையில், அவர்களைத் தொடர்ந்து அடுத்தபடியாக சின்னத்திரை நாயகி வினுஷா தேவி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு பிறந்த வினுஷா தேவிக்கு தற்போது வயது 25. தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, மாடலிங் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு உடனடியாக மாடலிங் துறையில் களமிறங்கிய வினுஷா தேவிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு தான் N4 என்ற திரைப்படம்.

N4 திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. அந்த திரைப்படத்தில் அவர் நடித்த பின்னர் வினுஷா தேவிக்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் ஏற்கனவே நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்த கதாபாத்திரத்தில் வினுஷா தேவிக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதில், இவருடைய கதாபாத்திரம் பொருந்திப் போகவே தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாம் பாகத்திலும் வினுஷா தேவி நடித்து வருகிறார். இதனிடையே தான் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் வினுஷா.

வினுஷா தேவிக்கு ஏற்கெனவே ரசிகர்கள் பலர் உள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு எந்த அளவுக்கு கை கொடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…

Total
0
Shares
Related Posts