ITamilTv

நாங்கள் பிரிந்து விட்டோமா? – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பாவனி

Spread the love

சமீபத்தில் ரசிகர் ஒருவரில் கேள்விக்கு அளித்த பதிலை பார்த்து ரசிகர்கள் உருகி உருகி காதலித்த பாவனியை – அமீர் பிரிந்து விட்டாரா? என்கிற சந்தேகத்தை எழ செய்த நிலையில், தற்போது இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர்.

பிக்பாஸ் பவானிக்கும் அமீருக்கும் இடையே பிரேக் அப் ஆகிவிட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில், இது குறித்து பவானி விளக்கம் அளித்துள்ளார்.

சின்னத்திரை நடிகையாக வலம்வந்த பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த போட்டியில் வயல் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அமீர். இந்த போட்டியில் கலந்துகொண்ட இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. முதலில் அமீரின் காதலுக்கு மறுப்புத் தெரிவித்த பாவனி, பின்னர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் அமீருடன் ஒன்றாக இணைந்து நடனம் ஆடினார்.

அப்போது இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட, பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி முடிவதற்குள் தங்களுடைய காதலையும் இருவரும் உறுதி செய்தனர். மேலும் இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் ரொமான்டிக் புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டும் வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக பாவனி ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என கேள்வி எழுப்ப, அதற்கு பாவனி ஆமாம் என பதிலளித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் இடையில் பிரேக் அப் ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் உண்மை இல்லை என்றும், தங்களுக்கு இடையில் பிரேக் அப் ஆகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் வேப்சீரிசில் நடித்து வருவதாகவும், தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version