ITamilTv

பிக்பாஸ் பிரபலம் விக்ரமனின் மறுமுகம்.. வெளியான ஆதாரங்கள் – விக்ரமனை சீண்டும் அசீம்!

Spread the love

பிக் பாஸ் சீசன் 6-ல் பங்கேற்று பல அரசியல் விவாதங்கள், அரசியல் முற்போக்கு தத்துவங்கள் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்து பிக் பாஸ் சீசன் 6ல் ரசிகர்களின் பேராதரவுடன் 2 வது இடத்தை பிடித்தார் விக்ரமன்.

இந்நிலையில், தற்போது காதல் என்ற பெயரில் பல லட்சங்களை தன்னிடம் இருந்து பெற்று கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக சமூக செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான கிருபா முனுசாமி என்ற பெண் விக்ரமன் மீது குற்றம்சாட்டி உள்ளார்.

லண்டனில் சட்டத் துறையில் டாக்டரேட் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் கிருபா முனுசாமி விக்ரமன் தன்னை 3 ஆண்டு காலமாக ஏமாற்றி வந்துள்ளதாக தனது இணையதள பக்கத்தில் ஆதாரங்களுடன் பதிவிட்டு வருகிறார்.

அதில், பல முறை தன்னை ஜாதி ரீதியில் கொச்சை படுத்தி பேசியதாகவும், பணம் கேட்டு டார்ச்சர் செய்ததாகவும் அவர்கள் செய்து கொண்ட மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆப்பிள் போன், ஆப்பிள் வாட்ச், எர் பாட்ஸ், யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என லேப்டாப் ஆகியவற்றை தன்னை வற்புறுத்தி ஏமாற்றி வாங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கிருபா. தற்போது, மேனேஜர் பெண் ஒருவருடன் தொடர்பில் இருப்பதகாவும், 15 க்கும் மேற்பட்ட பெண்கள் விக்ரமனால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் பலருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அவர் மீது நான் புகார் கொடுக்க போவதாக கூறிய போது, உனக்கு சின்ன ஆட்களை மட்டுமே தெரியும். ஆனால் எனக்கு அரசியல் ரீதியாக பெரிய குழுவே உள்ளது என்று கூறி என்னை மிரட்டினார்.

இதனால் நான் அவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் 20 பக்க புகார் மனுவை கொடுத்திருந்தேன். அதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை திருமாவளவன் அமைத்து 20 நாட்களில் இதனை விசாரித்து அறிக்கையை தர வேண்டும் என்று கூறினார்.

ஆனால், இந்த குழு தனது அறிக்கையை சமர்பிக்க 40 நாட்கள் எடுத்து கொண்டதாகவும், ஒரு மாதம் கழித்தும் அந்த அறிக்கை குறித்த நகல் எனக்கு கொடுக்கப்படவே இல்லை. அலுவலக பணியாளர்கள் இது குறித்து பேசவும், இந்த அறிக்கையை பற்றி பகிரவும் பயப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது விக்ரமனுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்த அசீமின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும். (என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும்)” என பதிவிட்டுள்ளார் அசீம்.

இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் விக்ரமன் மெளனமாக இருந்து வருவதால், இது உண்மையாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், மறுபுறம் கிருபா முனுசாமி வெளியிட்ட ஆதாராங்கள் அனைத்தும் போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டவை என்றும் விக்ரமனின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version