பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே இருக்கும் ஜோவிகாவின் தாய் வனிதா விஜயகுமார் கமல்ஹாசன் மீது வழக்கு தொடுப்பதாக பேசி இருக்கும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆறு சீசன்களை கடந்து வெற்றிகரமாக 7வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த 7வது சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக கடந்த வாரம் பிரதீப்பால் பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி அவரை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிலையில், பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றதன் பின்னணியில் சதி இருப்பதாகவும் மாயா, பூர்ணிமா ஜோவிகா, ஐஷு மற்றும் நிக்சன் ஆகியோர் சேர்ந்து செய்த சூழ்ச்சியால் தான் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்து அவர் வெளியேற்றப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், கடந்த வார எபிசோட் தொடங்கிய போது பெண் போட்டியாளர்கள் அனைவரும் உரிமைக்குரல் எழுப்பியதும் ஜோவிகா தான் முதலில் பேசி இருந்தார். இதனால், அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில், உரிமை குரலின் போது தன் மகள் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசவே இல்லை என வனிதா விஜயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் பேசியதாவது, “என்னுடைய மகள் ஜோவிகா உமன் சேஃப்டி பற்றி எதுவும் பேசவே இல்லை. முதல் வாரத்தில் இருந்தே பிரதீப்புக்கும் அவளுக்கும் நல்ல புரிதல் இருந்து வந்தது. பிரதிப் வெளியேற்றப்பட்ட அன்றைய தினம் எல்லா பெண்களும் சேர்ந்து பிரதீப் மீதான தங்கள் கருத்தை முன்வைத்த போது ஜோவிகாவும் தன் தரப்பு வாதத்தை முன் வைத்தார் அவ்வளவுதான்..
ஆனால், திட்டம் தீட்டி பிரதீப்பை வெளியேற்ற நினைத்ததாக ஜோவிகா மீது சிலர் அவதூறு கருத்துக்களை பரப்பி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். இது என் மகளின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ரெட் கார்ட் விவகாரம் தொடர்பாக இந்த வாரம் கமல் பேசிய ஆக வேண்டும். இல்லை என்றால் அவர் மீது நானும் அல்லது என் மகளோ வழக்கு தொடுப்போம் என எச்சரித்துள்ளார்.
இந்த விஷயத்தில் என் மகளுடைய பெயர் அதிகமாக அடிபடுவதால் இதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவளுக்கு வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரியாக விளக்கம் கொடுக்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன்” என வனிதா கூறியுள்ளார்.