தமிழில் பிக்பாஸ் ( biggboss ) நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் தெலுங்கிலும் இதே போன்று பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.ஆனால் தெலுங்கில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நாகார்ஜுனாவுக்கு ஆந்திரா ஐகோர்ட் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் பிக் பாஸ் நிகழ்ச்சியை உடனே நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி விட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த ஆந்திரா ஐகோர்ட் இதன் தொகுப்பாளராக இருக்கும் நாகார்ஜுனாவிற்கு இது குறித்து விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
நாகார்ஜுனா மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளும் கூட இந்த நிகழ்ச்சி குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டிலிருந்து நோட்டீஸ் சென்றுள்ளது. இந்த வழக்கு விசாரணை 14 நாட்களுக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சீசனுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாகார்ஜுனா விலகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்துள்ளது.டிசம்பர் இரண்டாவது வாரம் இந்த சீசன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.