பிக்பாஸ் சீசன் 6-ல் தற்போது போட்டியாளர்கள் அவர்களின் வாழ்க்கை கதையை கூறி வருகிறார்கள்.இன்று டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அவரது கதையை சொல்லியிருக்கிறார்.
அதில்,அவர் எனது பெற்றோரும் டான்ஸ் மாஸ்டர்கள் தான் என்றும், வீட்டில் கடைக்குட்டி நான் என்பதால் பெற்றோருக்கு என் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததாகவும் கூறியுள்ளார்.ஆனால் சின்ன வயதிலேயே தனக்கு போலியோ அட்டாக் ஆனதால் கால் சரியாக வரவில்லை என்றும் அதன் பின் அப்பாவின் முயற்சியால் தான் அது சரியாகி டான்ஸ் மாஸ்டராக சினிமா துறைக்குள் வந்ததாக ராபர்ட் மாஸ்டர் கூறியுள்ளார்.
மேலும் மற்றவர்களைப் போல தன் வாழ்விலும் காதல் வந்ததாகவும் அவர் பெயரை தான் குறிப்பிட விரும்பவில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொண்டு பிறகு தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும் கூறியுள்ளார்.இருப்பினும் குழந்தை பிறந்ததும் தாங்கள் பிரிந்து விட்டது ஏன் என எனக்கு இன்னும் தெரியவில்லை என்றும் எனக்கு அந்த அளவு அறிவில்லை என அவர் விட்டு சென்றதாகவும் நான் சுத்தமாக படிக்கவில்லை என்று அவள் என்னை விட்டு பிரிந்ததாக அவர் கூறியுள்ளார்.
என் மகளுக்கு நான்தான் அப்பா என தெரியுமா? தெரியாதா என்று கூட எனக்கு தெரியவில்லை. என் முதல் மனைவி இன்னொரு திருமணம் செய்து கொண்டார்.ஆனால் என் மகளுக்கு நான்தான் அப்பா என நான் இறந்த பிறகாவது சொல்லுங்க என கண்ணிருடன் கதையை சொல்லி முடித்தார்.