ஹிந்தியில் சல்மான்கான் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனரான சஜித்கான் பங்கேற்கக் கூடாது என பல நடிகைகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.நடிகைகள் பலர் ‘மீ டூ’இயக்கங்கள் மூலம் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படுத்தினர்.இந்நிலையில் பிரபல ஹிந்தி இயக்குனர் சஜித்கான் மீது பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே இயக்குனர் சஜித்கான் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளார்.இதனை எதிர்த்து பல பெண்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா சஜித்கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இந்த காமக்கொடூரனை பிக்பாஸ் போட்டியாளராக சல்மான் கான் எப்படி அறிமுகப்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் மும்பையில் உள்ள ஜூஹு போலீஸ் நிலையத்தில் ஷெர்லின் சோப்ரா நேரில் சென்று சஜித்கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். மேலும் நிருபர்களை சந்தித்த அவர் சஜித்கான் மீது போலீசில் பாலியல் புகார் கொடுத்தேன்.போலீஸ் நிலையத்தில் எனக்கு யாரும் உதவவில்லை எனக்கே இப்படி என்றால் சாதாரண பெண் நிலைமை நினைத்துப் பாருங்கள் சஜித் கானுக்கு நடிகர் சல்மான் கான் உதவி செய்கிறார் இதனால் சஜித் கான யாரும் தொட முடியாது வழக்கில் பாரபட்சம் மற்றும் நீதி வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்