Bihar Lorry-Jeep collision : பீகாரில் கோகா காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள ஆமாப்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 80 இல் நடந்த டிரக், ஜீப் மீது விழுந்ததில் குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
திங்கள்கிழமை நள்ளிரவு பீகாரின் பாகல்பூரில் சரக்குகள் ஏற்றப்பட்ட டிரக் ஒன்று மாப்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 80 இல் வந்து கொண்டிருந்தது.
அதே போல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தங்களது எஸ்யூவி வாகனத்தில் ஒரு திருமண விருந்தில் கலந்து கொண்டு அங்கிருந்து அவர்கள் முங்கேரில் உள்ள தாபாரியில் இருந்து கஹல்கோவில் உள்ள ஸ்ரீமத்பூருக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர்.
மாப்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 80இல் டிரக் மற்றும் வாகனம் வந்து கொண்டிருந்த போது டிரக் வளைவில் திரும்பும் போது ஜீப் மீது சரிந்து விழுந்தது.
இதையும் படிங்க : கோயம்புத்தூர் தீ விபத்து… 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சாம்பலாகியது!!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோகா காவல் நிலைய ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள், மீட்புக் குழுவினருடன் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன.
சம்பவம் குறித்து கோகா காவல் நிலைய ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அஜீத் குமார் கூறுகையில், வேகமாக வந்த கம்பிகளை ஏற்றிச் சென்ற டிரக்கின் டயர் வெடித்ததால் அது கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை-80 இல் ஜீப் மீது மோதியதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும் ஜீப்பில் இருந்த பயணிகள் ஒரு திருமண விருந்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.
டிரக்கை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக அவர் கூறினார்.
இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிர் இழந்தனர் Bihar Lorry-Jeep collision.
3 மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு. இவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி அட்டூழியம் – இபிஸ் கண்டனம்!