“வெளுத்து வாங்கப்போகும் கனமழை” மிக தீவிர புயலாக வலுவடைந்ததது ‘பிபோர்ஜோய்’

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட இம்முறை மிக அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின . வெயிலின் தாக்கத்தால் முதியவர்கள் பலர் மயங்கி விழுந்து உயிரிழக்கும் செய்திகளை ஆங்காங்கே நம்மால் பார்க்க முடிகிறது .

இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல இடங்களில் கடந்து சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

அந்தவகையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் (7-6-23 முதல் 10-6-23 வரை) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இரண்டு முதல் 4 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .

இந்நிலையில் அரபிக்கடலில் நேற்று முன்தினம் உருவான பிபோர்ஜோய் புயல் தற்போது மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜோய்’ மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாகவும் இது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 3 நாட்களில் வடக்கு நோக்கி நகரும் என்றும் இதனால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரை உள்ள மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

Total
0
Shares
Related Posts