மக்களவையில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது :
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் சிந்தனைகள் இடம்பெற்றிருக்கும். அரசியல் சாசனம் ஏக போகத்துக்கு எதிரானது. அதனால்தான் பாஜக 24 மணி நேரமும் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது.
துரோணாச்சாரியார் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியது போல், ஒன்றிய பாஜக அரசாங்கம் இந்திய மக்களின் கட்டை விரலை வெட்டுவதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
மும்பை தாராவியை அதானிக்கு வழங்கியதன் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கட்டை விரலை வெட்டுகிறார்கள்.
இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையை அதானியிடம் ஒப்படைக்கும்போது, நேர்மையாக உழைக்கும் நியாயமான வணிகர்களின் கட்டைவிரலை வெட்டுகிறார்கள்.
Also Read : தூத்துக்குடியை மிரட்டும் கனமழை – ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்..!!
அக்னிவீர் திட்டம் மூலம் இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டுகிறார்கள். வினாத்தாள் கசிவு மூலம் மாணவர்களின் கட்டைவிரலை வெட்டுகிறார்கள். ஒன்றிய பாஜக அரசு துரோணாச்சாரியாராக செயல்படுகிறது.
மத அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்டவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது? பாஜக ஆட்சியில் பாலியல் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போர் இந்தியாவில் நடக்கிறது. எதிர்க்கட்சியினர்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மையான பாதுகாவலர்கள். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அரசியலமைப்பின் பாதுகாவலர்கள் எங்களிடம் உள்ளனர்.
தமிழ்நாடு என்று கேட்டால் பெரியார் எங்களிடம் இருக்கிறார். கர்நாடகா என்று கேட்டால் எங்களிடம் பசவண்ணா இருக்கிறார். மகாராஷ்டிரா என்று கேட்டால் ஜோதிராவ் புலே, அம்பேத்கர் என்று சொல்வோம். குஜராத்தைப் பற்றி கேட்டால், மகாத்மா காந்தி இருக்கிறார் என்று சொல்வோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.