மேடையில்’ ஒன்றிய அமைச்சர்’ என்று குறிப்பிட்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியை பாஜகவினர் ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இராமநாதபுர மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள மூக்கையூர் துறைமுகத்தில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைப்பு குறித்து மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் L . முருகன்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி,பால்வளத்துறை அமைச்சர் பிரஷாத் பூபால உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது இருந்தது.

இந்த நிலையில் நிகழ்ச்சி 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 8.30 க்கு மத்திய இணை அமைச்சர் ,பால்வளத்துறை அமைச்சர் வருகை தந்தனர். அப்போது அவர்களுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி,மத்திய அமைச்சர் என்று கூறாமல் ,”ஒன்றிய அமைச்சர் கூறினார்.

இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒருமையில் பேசினர்.இதனையடுத்து மேடையில் பேசிக்கொண்டு இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பாதியில் சென்றார்.இதனால் அந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.