தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கன்னட படம் ஒன்றில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக தலைவருமான கே.அண்ணாமலை தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்தப் படத்துக்கு அவர் கொடுத்த சம்பளம் வெறும் 1 ரூபாய் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
பாஜக தலைவர் அண்ணாமலை ‘அரபிக்’ என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இவரின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற கே.எஸ். விஸ்வாஸின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
இந்த படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்திருக்கும் அண்ணாமலை இப்படி ஒரு படத்தில் நடிக்க இயக்குனர் கேட்டபோது கதை கேட்க சம்மதித்து, பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து, தற்போது தமிழக அரசியலில் வேகமாக சுழன்று வரும் நிலையில், தற்போது திரையுலகிலும் கால் பதித்திருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.