நமது நாட்டின் உண்மையான பழமையான பெயர் பாரத். இந்தியாவின்(INDIA) பெயரை மாற்றம் செய்யவேண்டும் என்று பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் பன்சால் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பதாக முடிவெடுத்துள்ளது
அந்த வகையில் முதற்கட்டமாக ஜூன் 23 -ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது .இதனை தொடர்ந்து ஜூலை 13 ஆம் தேதி பெங்களூரில் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் திமுக,காங்கிரஸ் ,மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு 6 முக்கிய அடிப்படை செயல்திட்டங்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டத்திற்கு “இந்தியா” (INDIA)என்றும் பெயர் வைக்கப்பட்டது.
இந்தியா என்ற பெயருக்குப் பிரதமர் மோடி,கிழக்கு இந்திய கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளின் விமர்சித்துப் பேசி இருந்தார்.
இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் பேசிய பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் பன்சால் எதிர்க்கட்சிகள் இந்தியா எனப் பெயர் வைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து “நமது நாட்டின் உண்மையான பழமையான பெயர் பாரத்.இந்தியா இல்லை என்றும் பாரத் என்ற பெயரை இந்தியா எனப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டனர். இந்தியா என்ற பெயர் அடிமைத்தனத்தின் குறியீடு எனத் தெரிவித்து இருந்தார்.
எனவே, அதை அரசியலமைப்பிலிருந்தே அதை நீக்கம் செய்யவேண்டும். மேலும், இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.