ஜம்முவை சேர்ந்த பிரபல இன்ஸ்டா பிரபலம் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த RJ மற்றும் இன்ஸ்டா பிரபலம் தான் 25 வயதாகும் சிம்ரன் சிங் சுறுசுறுப்பான பேச்சால் பலரது மனதில் இடம்பிடித்த இவருக்கு இன்ஸடாவில் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான followers உள்ளனர்.
இந்நிலையில் ஹரியானாவில் உள்ள அவரது வீட்டில் சிம்ரன் சிங் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிம்ரன் சிங் சடலத்தை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சிம்ரன் சிங் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ள போலீசார், இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். சிம்ரன் சிங் மறைவுக்கு அவரது ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.