கேரள மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது .

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் 3 குண்டுகள் வெடித்துள்ளது . இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டுள்ளதகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பேட்டி அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறிருப்பதாவது :
களமச்சேரியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடித்தது என்ன மாதிரியான குண்டுகள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல் கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.