சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் இன்று வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஒவ்வரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாரத திருநாட்டின் சுதந்திர விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடப்பாண்டும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது .
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த புனித நாளில் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் ராணுவ வீரர்களின் பார்ப்பரிய பரைடும் நடத்தப்படும் .
Also Read :Breakup-க்கு பிறகு மாறிய வாழ்க்கை – சீனாவில் நடத்த வினோத சம்பவம்..!!
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கோவையில் ரயில் நிலையம், விமான நிலையம், கடை வீதிகள், வணிக வளாகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையத்தில் நுழைவு வாயில், நடைமேடைகள், பார்சல் பெறப்படும் இடங்களில் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ரயில் நிலையம் வரும் பயணிகள் ஸ்கேனர் மூலம் சோதனை செய்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கோவை மட்டுமின்றி மக்கள் அதிகம் கூடும் நாட்டின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.