நடிகர் விஜய் வீட்டுக்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை காவல்நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அவரின் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் உடனடியாக விஜய் வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பும் இதுபோல தமிழ் நடிகர்கள் சிலரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.