ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்களுக்குத் தீபாவளி பண்டிகை சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறைகளில் ஒன்றான ரயில்வேத்துறை ஊழியர்களுக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.
அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும் அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்கள் போனஸ் பெறுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார்.