தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்துக்கு சேவை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் முன்பதிவு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு முதல் பயணமும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது .
அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் இலங்கைக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கப்பலில் பயணம் செய்ய பல்வேறு தேதிகளில் பலரும் முன்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் போதமான் பயணிகள் இல்லை எனக்கூறி இந்த கப்பல் போக்குவரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு ஆக.,16 முதல் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது .
இதையடுத்து சிவகங்கை என்று பெயரிடப்பட்டுள்ள பயணிகள் கப்பலில் பயணிக்க, இன்று இரவு முதல் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .
சாதாரண வகுப்பு கட்டணமாக ஒருவருக்கு ₹5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; பிரீமியம் வகுப்பில் ஒரு நபருக்கு கட்டணமாக 7,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது