சேலத்தில் குண்டூசியை விழுங்கி உயிருக்கு போராடிய சிறுவனை அரசு மருத்துவர்கள் லாவகமாக அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
சேலம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (13) என்ற சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய குண்டூசியை அறுவைச் சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றிய அரசு மருத்துவர்களுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது .
Also Read : இந்திய ஆடோமொபைல் சந்தைக்குள் டெஸ்லாவின் வருகை சாத்தியமா..?
சிறுவனின் வலது நுரையீரல் மூச்சுக் குழாயில் சுமார் 3 செ.மீ நீள குண்டூசி இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் பேராசிரியர் கிருஷ்ண சுந்தரி தலைமையிலான மருத்துவர்கள் குழு சிறுவனின் தற்போது நிலையை கருத்தில் கொண்டு அச்சிறுவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அவரின் உயிரை காத்துள்ளனர்.
உரிய நேரத்தில் மருத்துவனைக்கு சென்றதாலும் திறமை வாய்ந்த மருத்துவர்கள் லாவகமாக கையாண்டதாலும் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.