ராசி புரம் அடுத்த செம்மண்ணோடு பள்ளி பேருந்துக்காக நிழல் கூடத்தில் காத்திருந்த 5ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவத்தில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி மாணவிகள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசி புரம் அடுத்த செம்மண் காடு பகுதி சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் பிரபாகரன் 10 கார்கூடல்பட்டி பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளிசெல்வதற்காக செம்மண்ணோடு பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் காத்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது தனியார் கல்லூரி பேருந்தானது நாரை கிணறு பகுதியிலிருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. குறுகிய சாலை என்பதால் கல்லூரி பேருந்து வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே சுமையுந்து வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சுமையுந்து மீது மோதாமல் இருப்பதற்காகக் கல்லூரி பேருந்து ஓட்டுனர் அன்பழகன் பேருந்து இடதுபுறமாகத் திருப்பி உள்ளார்.நிழல் கூடத்தில் காத்துக் கொண்டிருந்த 5ம் வகுப்பு பயிலும் மாணவன் பிரபாகரன் மீது கல்லூரி பேருந்து மோதி உள்ளது. பேருந்து மோதிய வேகத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 2 மாணவிகள் படுகாயம் அடைந்து ராசி புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் சம்பவம் தொடர்பாக ஆயில்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தனியார் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளாகி பேருந்திலிருந்த மாணவிகள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.