Site icon ITamilTv

80க்கும் மேற்பட்ட முறை அதிர்த்த கட்டிடங்கள் – தைவானில் பயங்கர நிலநடுக்கம்..!!

earthquake in taiwan

earthquake in taiwan

Spread the love

தைவானில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை (செவ்வாய்க்கிழமை) வரை தொடர்ந்து ( earthquake in taiwan ) நிலநடுக்கங்களைச் சந்தித்தது, இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தன

குறிப்பாக, உலகின் 90% நிலநடுக்கங்கள் நிகழும் பசிபிக் பெருங்கடலில் உள்ள நெருப்பு வளையத்தின் (Ring of Fire ) குறுக்கே அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகத் தைவான் உள்ளது.

இந்த தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள நீரில் 1980 முதல் 4.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவில் சுமார் 2,000 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன, மேலும் 100 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் 5.5 க்கு மேல் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பெருமளவில் கிராமப்புற மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஹுவாலியன் தாக்கப்பட்டது, இது குறைந்தது 14 பேரைக் கொன்றது.

ஏப்ரல் 3 ஆம் தேதி தீவைத் தாக்கிய இந்த பெரிய கொடிய நிலநடுக்கத்தின் பின்னடைவுகள்தான் இப்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களுக்கு காரணம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read : MI Vs RR : 200வது விக்கெட்டை பதிவு செய்தார் யுஸ்வேந்திர சாஹல்..!!

தைவானில் நேற்று மாலைத் தொடங்கி அடுத்தடுத்து 80 க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. 80-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

குறிப்பாக 80-க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட கட்டிட அதிர்வால் உயரமான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஹூலைன் மாகாணத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டிடங்கள் லேசான சேதம் அடைந்து ( earthquake in taiwan ) இருப்பதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தைவான் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Spread the love
Exit mobile version