ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் உயிரிழந்தவர்களின் ( yercaud ) குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.
Also Read : சென்னை தண்ணீர் பற்றாக்குறை – தொடர் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த அரசு..!!
விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் ( yercaud ) அனுமதி பெற்று வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.