புதுச்சேரியில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
AC வசதியில்லாத நகரப் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ₹5-லிருந்து ₹7 ஆகவும், அதிகபட்சமாக ₹13-லிருந்து ₹17 ஆகவும் கட்டணம் உயர்வு
AC வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்சம் ₹10-லிருந்து ₹13 ஆகவும், அதிகபட்சமாக ₹26-லிருந்து ₹34 ஆகவும் அதிகரிப்பு
DELUXE பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ₹12-லிருந்து ₹16 ஆகவும், அதிகபட்சமாக ₹36-லிருந்து ₹47 ஆகவும் உயர்வு
புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு ₹0.75 பைசா என்பது ₹0.98 பைசாவாக உயர்வு; 25 கி.மீ., வரை ₹20 லிருந்து ₹25 ஆக அதிகரிப்பு
Also Read : நீதிமன்ற வாயிலில் நடந்த கொடூர கொலை – 4 பேர் கைது..!!
புதுச்சேரி எல்லைக்குள் AC விரைவுப் பேருந்துக் கட்டணம் கி.மீ.,க்கு ₹1.30-லிருந்து ₹1.69 ஆக உயர்வு
புதுச்சேரி நகரத்திற்குள் VOLVO பேருந்துகளுக்கான கட்டணம் கி.மீ.,க்கு ₹1.70-லிருந்து ₹2.21 ஆக உயர்வு
புதுச்சேரியிரிலிருந்து கடலூருக்கான கட்டணம் ₹20-லிருந்து ₹25 ஆகவும், விழுப்புரத்திற்கு ₹25-லிருந்து ₹30 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள்ளது.
இந்நிலையில் புதிய பேருந்துக் கட்டண உயர்வுக்கு தற்போது அம்மாநில மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.