ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி, இத்தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இதையடையது அத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வந்த திருமகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் .
Also Read : நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமின்..!!
இதையடுத்து காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் 2023-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், டிசம்பர் 14-ம் தேதி காலமானர். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ல் நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .