Site icon ITamilTv

பொங்கல் நாளன்று நடைபெற உள்ள CA தேர்வை ஒத்திவைக்க வேண்டும் – சு.வெங்கடேசன்

Su Venkatesan

Su Venkatesan

Spread the love

பொங்கல் திருநாளன்று பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுவதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .

“CA Foundation தேர்வு தேதிகளை மாற்ற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறிருப்பதாவது :

தமிழ்நாட்டு மக்கள் திருவிழாவான பொங்கல் (ஜன. 14) அன்றும், உழவர் திருநாள் (ஜன.16.) அன்றும் Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Also Read : வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது..!!

பொங்கல் நாளில் தேர்வுகளை அறிவித்து தமிழ்பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் தேர்வு தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பண்டிகை நாட்களில் எந்த ஒரு தேர்வையும் நடத்த கூடாது என தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு அவை எதையும் கண்டுகொள்ளாமல் முக்கிய தேர்வுகளை பண்டிகை நாட்களிலேயே நடத்த திட்டமிட்டு வருவது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version