150CCக்கு அதிகமாக உள்ள பைக்கை ஓட்டிச் சென்று விபத்தில் இறந்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்று தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் கூறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் பைக் விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினர் காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு தொகையை கேட்டுள்ளனர்.
இதற்கு அவர்களின் தனியார் காப்பீட்டு நிறுவனம் 150 CC வாகனத்தில் சென்று விபத்து ஏற்பட்டு இறந்தால் மட்டுமே இந்த காப்பீடு செல்லுபடி ஆகும் ஆனால் விபத்தில் இறந்தவர் 346 CC பைக்கில் சென்று இறந்துள்ளார்.
இதனால் இந்த காப்பீடு செல்லுபடி ஆகாது என்று பதில் அளித்துள்ளது.
தனியார் நிறுவனத்தின் இந்த பதிலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது சந்தைகளில் சாதாரணமாகவே 150சிசிக்கும் அதிகமான பைக்குகள் வருகின்றன. 150சிசிக்கு குறைவாக சில பைக்குகளே விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி இருக்கு பொழுது உயிரிழக்கும் யாருக்கும் காப்பீடு தொகை கிடைக்காது என்ற ரீதியில் தான் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் பதில் அமைந்துள்ளதுள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்