தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தை மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க உள்ளது.இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் “2022 தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
அதன் படி!
பச்சரிசி -1 கி
வெல்லம் – 1கிலோ
முந்திரி – 50கிலோ
திராட்சை – 50கிலோ
ஏலக்காய் – 10கிலோ
பாசிப்பருப்பு – 1/2கிலோ
நெய் – 100கிலோ
மஞ்சள்தூள் – 100கிலோ
மிளகாய் தூள் – 100கிலோ
மல்லித்தூள் – 100கிலோ
கடுகு – 100கிலோ
சீரகம் – 100கிலோ
மிளகு – 50கிலோ
புளி – 200கிலோ
கடலைபருப்பு – 250கிலோ
உளுத்தம்பருப்பு – 500கிலோ
ரவை – 1கிலோ
கோதுமை மாவு – 1கிலோ
உப்பு – 500 கிலோ
துணிப்பை – 1கிலோ. உள்ளிட்டவையுடன் கரும்பு ஒன்றும் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.
இதன் தொகை பயனாளி ஒருவருக்கு ரூ.505/- . இந்த தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இதனை கண்காணிக்கவும், மக்களிடையே சரியான முறையில் சென்று சேர்வதை உறுதி செய்யவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்மந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர், மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு நுகப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்துவது குறித்த விரிவான அறிவுரைகள் தனியே வழங்கப்படும்”, எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.