ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான சொர்க்கவாசல் படத்தின் OTT ரிலீஸுக்கு தடைபோட முடியாத என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர இயக்குநராகவும் , நடிகராகவும் வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள “சொர்க்கவால்” திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, OTTயில் வெளியீடு செய்ய தடை கோரிய மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திரைப்படம் வெளியாக தடை கேட்பது இப்போது ஒரு பேஷனாக உள்ளது. படத்தை எடுத்துவிட்டு, அதற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்து, படத்தை பிரபலமாக்குவது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்.
Also Read : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு – தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!!
ஒரு திரைப்படத்தில் சில கருத்துகள் வந்தாலும், அந்த கருத்தை சர்ச்சையாக்குவதால் அதிகமானோர் அதை பார்க்கும் சூழலும் ஏற்படும். பொழுதுபோக்கு என அதை விட்டுவிட்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடும்.
நாடு முழுவதும் இப்படம் வெளியீட்டுக்கு தடை விதிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. சென்னை உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யுங்கள் என நீதிபதிகள் தெரிவித்து தடை கோரிய மனுவை நிராகரித்துள்ளனர்.