தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .
நடிகரும் தேமுதிக தெளிவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக நேற்று முன் தினம் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்
பூரண நலத்துடன் இருக்கிறார் பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் என தேமுதிக சார்பில் அறிக்கைவி வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறிருப்பதாவது :
மருத்துவ பரிசோதனையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.