Site icon ITamilTv

Captain Ayalaan – அயலான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

Captain Ayalaan

Captain Ayalaan

Spread the love

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ள அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்களுக்கு (Captain Ayalaan) சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

குளோபல் ஸ்டார் தனுஷ் மற்றும் மெழுகு டால் பிரியங்கா மோகன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் .

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப வேண்டும் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து கேப்டன் மில்லர் படத்திற்கு வரும் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதேபோல் இந்த பக்கம் குடும்ப நயங்கன் சிவகார்த்திகேயன் , ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் வேற லெவலில் உருவாகி உள்ள திரைப்படம் அயலான்.

KJR நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கும் சிறப்பு காட்சிகள் வேண்டி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த படத்திற்கும் தமிழக அரசு (Captain Ayalaan) அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து அயலான் படத்திற்கு ஜனவரி 12 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வழக்கமான திரையிடப்படும் காட்சிகளை விட 2 காட்சிகள் கூடுதலாக திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படம் பல தடைகள் பல போராட்டங்களை கடந்து ஒருவழியாக இந்த வருட பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

Also Read : https://itamiltv.com/collector-request-why-do-you-have-to-leave-school/

இம்முறை பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ்,

சிவகார்த்திகேயனின் அயலான் அருண் விஜய்யும் மிஷன் சாப்டர் 1 ஒரே நாளில் வர உள்ளது.

இந்நிலையில் இந்த பொங்கலுக்கு பல சூப்பர் ஹீரோக்களின் படங்கள் வெளிவரும் நிலையில்

எந்த படம் ரசிகர்களை கவர்ந்து தாறுமாறான வெற்றியை பெற போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.


Spread the love
Exit mobile version