ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பட்டிருந்த டோனட் டிரம்ப் தற்போது இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் மீது ஏராளமான பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதற்கிடையில் கடந்த 2016- ஆம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் ட்ரம்புடனனான பாலியல் உறவில் ஈடுபட்டது குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த செய்து உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்த நிலையில் ஸ்டோர்மி டேனியல்ஸ் வாய் திறக்காமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை டிரம்ப் வழங்கியதாக கூறப்படுகிறது .
Also Read : போதைப் பொருள் பற்றி தகவல் கூறியவர்களுக்கு 11 கோடி பரிசு..!!
இருப்பினும் ஸ்டோர்மி டேனியல்ஸ் அளித்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து டிரம்ப் சிறைக்கு செல்வது உறுதி என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சட்டென அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிலும் அபார வெற்றியை பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப்.
இதையடுத்து டிரம்ப் அமெரிக்காவின் 47 ஆவது பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் தற்போது
அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அமெரிக்க நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.