சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பேசினார்.
ஜி.கே.மணியின் பேச்சுக்கு பதில் கொடுக்கும் விதமாக பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினை குறித்து உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் தகுந்த பதிலை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு என்று சொன்னால், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவர உள்ளோம். அதற்கு ஜி.கே.மணி ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுகொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.