நாடு முழுக்க இன்று சிபிஎஸ்இ (cbse board exam) பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் +2 மாணவ-மாணவிகளுக்கு இன்று பிப்ரவரி 15ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது.
10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 13-ம் தேதி முடிவடைகிறது. அதே போன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 2 ம் தேதியன்று முடிவடைகின்றன.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் நாள் தேர்வுத் தாளாக ஓவியம் உள்ளிட்டவையும், 12-ம் வகுப்புக்கு முதல் தேர்வாக தொழில்முனைவு உள்ளிட்டவையும் இடம் பெறுகின்றன.
இந்தாண்டு நாடு முழுக்க மொத்தம் 39 லட்சம் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் படிப்பார்கள். இதனால் இந்தாண்டு இந்தியா உட்பட மொத்தம் 26 நாடுகளில் இந்த சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடக்கிறது.
முன்னதாக பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும் என்றும் தேர்வு எழுத வரும் அனைத்து மாணவ மாணவியரும் பள்ளி சீருடைகளை அணிய வேண்டும் என்றும், தேர்வு வாரியம் அறிவுறுத்தி இருந்தது.
அதே போல் சிபிஎஸ்இ (cbse board exam) வாரியத்தால் அனுமதிக்கப்படாத எதையும் தேர்வறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஸ்மார்ட் வாட்ச் அல்லது கால்குலேட்டரை உள்ளடக்கிய வாட்ச் போன்றவை முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளன.
ஒளி புகக்கூடிய பிளாஸ்டிக் பவுச், அடையாள அட்டை, பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை மட்டுமே தேர்வறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அத்தியாவசியமான ஒரு சில பொருட்களை வெளிப்படையான பை அல்லது பாக்ஸில் வைத்து தேர்வறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதையும் படிங்க : mexico : தூக்கி வீசிய காளை! இளைஞர் படுகாயம்
இதில் சர்க்கரை மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், சான்ட்விச், மருத்துவர் பரிந்துரையின் கீழான மருந்துகள், 500 மிலி தண்ணீர் பாட்டில், குளுக்கோமீட்டர் மற்றும் அதற்கான பரிசோதனை பட்டை உள்ளிட்டவற்றில் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெற வாரியம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.