CBSE முதல் பொதுத்தேர்வு குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
அதில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகளின் அட்டவணை இன்று வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ, 10,12ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற உள்ளதாகவும் குளிர்காலம் என்பதால் தேர்வுகள் காலை 11.30 மணி முதல் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 10, 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் ஆஃப்லைனில் நடத்தப்படும் என்றும் அக்டோபர் 18 ஆம் தேதி இதற்கான அட்டவணை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வுக்கான அட்டவணையை மத்திய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in அல்லது cbseacademic.nic.in மூலம் பார்த்து தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்றும் இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.