நாடு முழுவதும் மத்திய கல்வித்திட்டத்தின் கீழ் உள்ள சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டு கட்ட தேர்வு முடிவுகளும் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய கல்வித்திட்டத்தின் கீழ் உள்ள சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் மாணவர்கள் இந்த பொது தேர்வை எழுதி முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் பருவ மதிப்பெண்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் சுமார் ஒரு மாத காலம் எடுக்கும் என்பதால் காலதாமதம் ஏற்பட்டதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 92.71 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ அதிகார பூர்வ இணையதளமான cbse.results.nic.in என்ற இணையதளத்திலும் results.cbse.nic.in ஆகிய இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.