உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கண்காணிப்பு கேமராக்கள் ( voting machine ) செயலிழந்து இருந்தாலும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை; எந்த விதிமீறலும் நடைபெற வாய்ப்பு இல்லை என நீலகிரி ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள 173 கண்காணிப்பு கேமராக்களும் நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை 26 நிமிடங்கள் செயல்படவில்லை.
இந்த செய்தி வெளியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்த பலரும் பல விதமாக பேச ஆரம்பித்துவிட்டனர்.
Also Read : தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை – முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் இன்று இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள நீலகிரி ஆட்சியர் அருணா கூறியதாவது :
உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள 173 கண்காணிப்பு கேமராக்களும் நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை 26 நிமிடங்கள் செயல்படவில்லை.
தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கோளாறு சரி செய்யப்பட்டது . ( voting machine ) கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து இருந்தாலும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை . எந்த விதிமீறலும் நடைபெற வாய்ப்பு இல்லை என நீலகிரி ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.