2 – 18 வயது குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்.

central-expert-panel-allow-covaxin-vaccine-for-kids
central expert panel allow covaxin vaccine or kids

குழந்தைகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் அந்தப் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கபட்டுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி தயாரித்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், அதை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தியது.

central-expert-panel-allow-covaxin-vaccine-for-kids
central expert panel allow covaxin vaccine or kids

இதனைத் தொடர்ந்து இந்த மருத்துவ பரிசோதனை அறிக்கைய இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு அனுப்பி வைத்த நிலையில் 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு இத்தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரை செய்து, அந்தப் பரிந்துரையை இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கும் அனுப்பிவைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனை அடுத்து இந்த மருந்துக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து எந்த ஒப்புதலும் இதுவரை வழங்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், இதுகுறித்து நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts