Site icon ITamilTv

பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றோருக்கு பரிசுத்தொகை அறிவித்தது மத்திய அரசு..!!

Paralympics medal winners

Paralympics medal winners

Spread the love

சிறப்பாக நடைபெற்று முடிந்த பாராலிம்பிக்ஸ் தொடரில் தாய் நாட்டிற்காக பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நகரமான பாரிஸில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

செப்.8 வரை நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராலிம்பிக் போட்டி தொடரில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க்க உள்ளனர் .

Also Read : ஆக்சன் மன்னன் ஜூனியர் NTRன் ‘தேவரா’ பட ட்ரெய்லர் வெளியானது..!!

இந்நிலையில் அனல் பறக்க நடைபெற்ற இந்த தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இந்திய சார்பில் கலந்துகொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்கம் , வெள்ளி,வெண்கலம் என ஏராளமான பதக்கங்களை குவித்தனர்.

இதையடுத்து பதக்கம் வென்று நாடு திரும்பிய பாராலிம்பிக் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

அதன்படி தங்கம் வென்றவர்களுக்கு 75 லட்சம் , வெள்ளி வென்றவர்களுக்கு 50 லட்சம் , வெண்கலம் வென்றவர்களுக்கு 30 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version