ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை, வேலை, வணிகம், உறவுகள், நட்பு மற்றும் எதிரி போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தனது கருத்துக்களை, சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் (Chanakya Neethi) கூறியுள்ளார்.
இதையும் படிங்க : மதுபானக் கடைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுத்திடுக – டிடிவி கண்டனம்!
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர் கூறியுள்ள கொள்கைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் அனைத்தும் இன்றைய காலகட்டத்திலும் பொருந்துகிறது. அந்த வகையில்,
சாணக்கியரின் கூற்றுப்படி (Chanakya Neethi) ஒரு பெண் பின்வரும் குணங்களைக் கொண்டிருந்தால், அவரை மணந்து கொள்ளும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என கூறியுள்ளார்.
அந்த அறிகுறிகள் என்னென்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண் அமைதியான இயல்புடைய பெண்ணாக இருந்தால் அவர் லட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறார்.

அதன்படி, அமைதியான குணம் கொண்ட ஒரு பெண் மனைவியாக வந்து விட்டால் குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவும்.
எனவே, அந்த குடும்பம் மிக வேகமாக முன்னேறும். ஆனால், அமைதியற்ற பெண்ணால் கோபம், சண்டை சச்சரவுகள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும்.
இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே அமைதியாக இருக்கும் பெண்கள், குடும்பத்தில் நேர்மறை ஆற்றலை பரப்புவார்கள்.
02. ஒரு படித்த, நல்லொழுக்கமுள்ள, பண்பட்ட பெண் ஒரு ஆணின் மனைவியாக வந்தால், அவர் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து இன்னல்களையும் சமாளிப்பார்.
இதனால் கணவரும், குடும்பத்தினரும் விரைவில் முன்னேற்றமடையலாம். அத்தகைய பெண்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். பெரிய முடிவுகளை அச்சமின்றி எடுப்பார்கள்.
03. இனிமையாக பேசக்கூடிய, மென்மையாக நடந்துகொள்ள கூடிய ஒரு பெண்ணை மணக்கும் ஆண் எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவார். அத்தகைய பெண்களுக்கு சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும்.
04. குடும்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது விருப்பத்தை மாற்றிக் கொள்ளும் பெண்கள், ஒரு ஆணின் வாழ்க்கையில் வந்தால், தங்கள் கணவரையும், குடும்பத்தாரையும் ஒருபோதும் நிதி நெருக்கடியில் சிக்க விடமாட்டார்கள்.
05. சகிப்புத்தன்மை கொண்ட ஒரு பெண் ஒருபோதும் தங்கள் வாழ்க்கைத் துணையை விட்டு விலக மாட்டார்.
அத்தகைய மனைவியின் ஆதரவும், ஊக்கமும் அவருடைய கணவரை எந்த சிரமங்களிலிருந்தும் காப்பாற்றி அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
06. சிக்கனத்துடன் சேமிக்கும் பெண், தன் கணவருக்கு நிதிச் சிக்கல்களை ஏற்படுத்த மாட்டார். அவர்கள் கணவனின் முதுகெலும்பாக இருப்பார்கள். எப்படிப்பட்ட பணப் பிரச்சனையையும் எளிதாகக் கையாள்வார்.