தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
Also Read : விமான விபத்திற்கு ரஷ்யாவே காரணம் – அஜர்பைஜான் அதிபர் குற்றச்சாட்டு..!!
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது .
இதன் காரணமாக 31 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.