தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும்.
இன்று தூத்துக்குடி நெல்லை தென்காசி விருதுநகர் மதுரை இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை சேலம் திண்டுக்கல் கரூர் நாமக்கல் ஈரோடு திருச்சி அரியலூர் பெரம்பலூர் தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். மழையின்போது தரைக்காற்று பலமாக வீசும். இடிமின்னலும் வலுவாக இருக்கும்.
Also Read : சூர்யா நடிக்கும் “கங்குவா” திரைப்படத்தின் “Trailer” நாளை வெளியீடு
நாளை காற்று சுழற்சி உருவான பின்னர் ஆகஸ்ட் 12,13,14 ஆகிய மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும். குறிப்பாக தூத்துக்குடி நெல்லை தென்காசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் கோயம்புத்தூர் சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை வரை பெய்யும். மதுரை விருதுநகர் மாவட்டங்களில் போதும் போதும் என்றளவுக்கு மழை பெய்யும். தஞ்சை நாகை திருவாரூர் திருச்சி அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை காத்திருக்கிறது.
18 தாலுகாவுக்கு மிக கனமழை எச்சரிக்கை : தென்கோடி மாவட்டங்களில் ஆகஸ்ட் 12,13,14 ஆகிய மூன்று நாட்களுக்கு சிவகிரி சங்கரன்கோவில் திருவேங்கடம் கோவில்பட்டி எட்டயபுரம் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் கயத்தாறு ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாத்தூர் சிவகாசி விருதுநகர் அருப்புக்கோட்டை திருச்சுழி காரியாப்பட்டி வெம்பக்கோட்டை வத்திராயிருப்பு ஆகிய 18 தாலுகாவிற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாய பணிகள் அனைத்தையும் இன்றே நிறுத்த அறுவுறுத்தப்பட்டுள்ளது.