தமிழகத்தில் நாளை முதல் 6ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 6ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கோவை, தஞ்சை ஆகிய 13 மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்து வரும் 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.