ITamilTv

தமிழகத்தில் 4ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Spread the love

தமிழகத்தில் 7 நாட்கள் அதாவது ஆகஸ்டு 4ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்..

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (29-07-2023) முதல் வெள்ளிக்கிழமை (04-08-2023) வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்பநிலையைப் பொறுத்தவரை இன்றும்,நாளையும் (29-07-2023 – 30-07-2023) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version