தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
04.07.2024 மற்றும் 05.07.2024 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Also Read : ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்திடுக – ஈபிஎஸ்
06.07.2024 மற்றும் 07.07.2024 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி வெயிலும் மழையும் மாறி மாறி காட்டி வரும் நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறிருப்பது மக்களுக்கு சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.