டிச. 17, 18 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
டிச.16: இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது .
டிச.17: நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும், காரைக்காலில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .
தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை பெய்யலாம் .
Also Read : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு – தலைவர்கள் இரங்கல்..!!
டிச.18: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது .
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுமட்டுமின்றி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஒன்று உருவாகி உள்ளதாவும்
இது நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் எனவும் வரும் 17ஆம் தேதி தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.