ITamilTv

சந்திரயான்-3 எடுத்த நிலவின் காணொளி வெளியீடு..!

Spread the love

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து ஈடுபட்ட முதல் காணொளியை வெளியிட்டுள்ளது .

இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் ஜூலை 14 ஆம் தேதி அன்று பிற்பகல் சரியாக 2:35 மணியளவில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது .

இஸ்ரோ விஞ்ஞானிகளின் பல வருட உழைப்பின் சாட்சியாக உலக மக்கள் அனைவரும் உற்றுநோக்கும் வகையில் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் ‘சந்திராயன் -3’ விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்து .

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக LVM MK 3 ராக்கெட்டில் அனுப்பட்ட 3900 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று ‘சந்திராயன் -3’ விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றுவிட்டதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் முதல் காணொளியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இது நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்ட நேரத்தில் எடுத்த காணொளி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . சந்திரயான்-3 தற்போது வரை திட்டமிட்டபடி வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று திட்டமிட்டபடி நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

‘சந்திராயன் -3’ நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து ஈடுபட்ட முதல் காணொளி இதோ

https://twitter.com/chandrayaan_3/status/1688215948531015681

Spread the love
Exit mobile version