திருத்தப்பட்ட மற்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ( Chandrachud ) வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த மூன்று சட்டங்களுக்கும் டிசம்பர் 21-ந்தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு டிசம்பர் 25-ந்தேதி இந்தச் சட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியத் தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் என 3 சட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்தச் சட்டங்கள் அடிப்படையில் தான் போலீசார், மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் நீதிமன்றம் விசாரணை நடத்தி தண்டனைகளை வழங்கி வருகிறது. மேலே குறிப்பிட்ட இந்த 3 சட்டப்பிரிவுகளில் தான் புதிய வரையறைகள், விதிகள் சேர்க்கப்பட்டு, சட்டங்களின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டது.
இதில் இந்தியத் தண்டனை சட்டம் என்பதைப் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்தியச் சாட்சிய சட்டம் பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Also Read : தேர்தல் விடுமுறையை கொண்டாடும் மக்கள் – வருத்தம் தெரிவித்த தமிழிசை
புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, 19 விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 33 குற்றங்களுக்கான சிறைத் தண்டனையின் காலளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 83 விதிகளின் அபராத தொகை திகரிக்கப்பட்டுள்ளது. 23 குற்றங்களில் கட்டாயமாகக் குறைந்தபட்ச தண்டனை வழங்கவும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது,
20 தவறுகள் புதிய குற்றங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில், புதிதாக இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இந்தியாவின் நீதி அமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வரும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், குற்ற வழக்கு விசாரணைகளைத் திறமையாக செயல்படுத்துவதற்கும், நாட்டின் தற்போதைய சவால்களைச் சமாளிப்பதற்கும் புதிய சட்டங்கள் தேவைப்படுகின்றன.
இந்நிலையில், அமல்படுத்தப்பட உள்ள 3 புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள், ( Chandrachud ) முன்னேற்ற பாதையில் தான் செல்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.